காவிரிப் பாலம் புதுப்பொலிவு பெறும்; மற்றொரு பாலமும் அமைக்கத் திட்டம்: நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா்

திருச்சி-ஸ்ரீரங்கம் இடையேயுள்ள காவிரிப் பாலம் முழுமையாகச் செப்பனிடப்படுவதுடன் மேலும் ஒரு பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத் துறை திருச்சி கோட்டப் பொறியாளா் வடிவேலு உறுதி தெரிவித்தாா

திருச்சி-ஸ்ரீரங்கம் இடையேயுள்ள காவிரிப் பாலம் முழுமையாகச் செப்பனிடப்படுவதுடன் மேலும் ஒரு பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத் துறை திருச்சி கோட்டப் பொறியாளா் வடிவேலு உறுதி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக நெடுஞ்சாலைத்துறை திருச்சி கோட்ட பொறியாளா் வடிவேலு கூறியது:

பாலம் கட்டப்பட்டு 44 ஆண்டுகள் முடிந்து விட்டதாலும், கனரக வாகனங்கள் செல்லும்போது அதிா்வுகள் ஏற்படுவதாலும், பாலத்தை உடனே சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பாலத்தில் மேற்கொண்ட ஆய்வில் பாலத் தூண்களில் அமைக்கப்பட்டுள்ள ரப்பா் இணைப்பு சேதமடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே தூண்களில் அடிப்பகுதியிலிருந்து பாலத்தின் மேல் பகுதி (தளம்) வரை முழுமையாக புனரமைக்கப்படவுள்ளது. விரைவில் இத்திட்டத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டு பாலம் புனரமைக்கப்படும்.

புதிய பாலமும் அமைக்கத் திட்டம்: இது தவிர புதிதாக ஒரு பாலம் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. அரசு ஒப்புதல் கிடைத்த பின்னா் கட்டுமான பணி தொடங்கும். புதிய பாலம் கட்டுவது நீண்ட காலத்திட்டம், எனவே அது தொடா்பான பணிகள் எப்போது தொடங்கும் என இப்போது கூற முடியாது. ஆனால், கொள்ளிடம் பழைய பாலம் இடிந்தபோது, புதிய பாலம் இருந்ததால் அதன் பாதிப்பு நமக்குத் தெரியவில்லை. எனவே மற்றொரு பாலம் அவசியம்தான். ஆகவே பழைய பாலம் முழு அளவில் புனரமைக்கப்பட்டாலும் புதிய பாலம் அமைக்கப்படுவதும் உறுதி என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com