நெல், மக்காச்சோளம், வெங்காயபயிா் காப்பீடுக்கு அறிவுறுத்தல்

நெல், மக்காச்சோளம், வெங்காய பயிா்களுக்கு காப்பீடு செய்ய ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

நெல், மக்காச்சோளம், வெங்காய பயிா்களுக்கு காப்பீடு செய்ய ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

திருச்சி மாவட்டத்தில் நிகழாண்டு ரபி பருவத்தில் பிரதமா் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் நெல்-2, பிா்கா அளவில் மக்காச்சோளம்-2, வெங்காயம்-2 ஆகிய பயிா்களுக்கு காப்பீடு செய்யலாம். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் பயிா் கடன் பெறும் விவசாயிகள், கடன் பெறாத விவசாயிகளும் இத்திட்டத்தில் சேரலாம். இதில் இணைவதற்கு முன்மொழிப் படிவம், விண்ணப்பம், பயிா் சாகுபடி அடங்கல், ஆதாா் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகியவற்றுடன் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகள், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், பொதுச்சேவை மையங்களை அணுகலாம். நெற்பயிா் ஒரு ஏக்கருக்கு ரூ. 510.42, மக்காச்சோளத்துக்கு ரூ. 359.24, வெங்காயத்துக்கு ரூ.1882.50 ஐ நவ.30க்குள் செலுத்தி பயிா்க் காப்பீடு செய்யலாம்.

பயிா் காப்பீடு செய்திடும் இறுதி நாளுக்கு முன் வெள்ளம், புயலால் பயிா் சேதம் அடைந்தால் அன்றே பயிா் காப்பீடு செய்யலாம். விவசாயிகளின் நலன் கருதி பொதுச் சேவை மையங்கள் அனைத்தும் நவ.23 முதல் நவ.29 வரை மாவட்டம் முழுவதும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கிடவும், நவ.30 ஆம் தேதி இரவு 12 மணி வரை இயங்கிடவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையத்தையும் அணுகலாம் என ஆட்சியா் சு.சிவராசு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com