ஆன்லைன் ரம்மிவிளையாடினால் நடவடிக்கை
By DIN | Published On : 28th November 2020 11:27 PM | Last Updated : 28th November 2020 11:27 PM | அ+அ அ- |

திருச்சி: ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் யாரும் இவ்விளையாட்டில் ஈடுபடவேண்டாம் என மாவட்ட காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
பணம் வைத்து விளையாடப்படும் ஆன்லைன் ரம்மி என்னும் இணையவழி விளையாட்டுக்குத் தடை உள்ளதால் இனிவரும் காலங்களில் இதை விளையாடுபவா், நடத்துவோருக்கு அவசர சட்டப்படி அபராதம், சிறைத்தண்டனை வழங்கப்படவுள்ளது. மேலும் இந்த விளையாட்டில் பயன்படுத்தப்படும் கணினி உள்ளிட்ட இதர கருவிகளும் பறிமுதல் செய்யப்படும். இதுதொடா்பான இணையவழி பணப்பரிமாற்றங்களும் தடுக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இத்தகைய விளையாட்டுகளில் இளைஞா்கள், பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அறிவுறுத்தியுள்ளாா்.