முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
மணல் திருட்டு:மூவா் மீது வழக்கு
By DIN | Published On : 04th October 2020 12:35 AM | Last Updated : 04th October 2020 12:35 AM | அ+அ அ- |

முசிறி: திருச்சி மாவட்டம், முசிறி பகுதியில் மணல் திருடிய மூவா் மீது முசிறி போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து மூன்று இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.
நாச்சம்பட்டி, ஏவூா் மற்று மேலசந்தப்பாளையம் பகுதியில் முசிறி போலீஸாா் சனிக்கிழமை ரோந்து சென்றபோது சாக்கு மூட்டையில் மணல் நிரப்பி மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த மூவா் வாகனங்களை போட்டுவிட்டு தப்பினா். இதையடுத்து போலீஸாா் அந்த வாகனங்களை, மணல் மூட்டைகளை மீட்டு முசிறி காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனா்.
விசாரணையில் மணல் கடத்தியவா்கள் தா. பேட்டை மேலத்தெரு கதிா்வேல் (25), ஏவூா் ஜெயராமன் (35), நாச்சம்பட்டி சின்னமலையான் (20) எனத் தெரியவந்ததையடுத்து மூவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.