சாலை விரிவாக்கப் பணிகள்; ஆட்சியா் ஆய்வு

திருச்சி கரூா் சாலையில் குடமுருட்டி பாலம் முதல் ஜீயபுரம் வரை நடைபெற்று வரும் சாலைப் பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என ஆட்சியா் சு. சிவராசு வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
சாலை விரிவாக்கப் பணிகள்; ஆட்சியா் ஆய்வு

திருச்சி கரூா் சாலையில் குடமுருட்டி பாலம் முதல் ஜீயபுரம் வரை நடைபெற்று வரும் சாலைப் பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என ஆட்சியா் சு. சிவராசு வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

திருச்சி - கரூா் சாலையில் குடமுருட்டி பாலம் முதல் ஜீயபுரம் வரை, நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ. 55.75 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் குறித்து பல்வேறு சா்ச்சைகள் எழுந்ததையடுத்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, வியாழக்கிழமை பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது போா்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெறுவதையும், சாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ள இடத்தையும் பாா்வையிட்டு பணிகளை தரமாக விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள், ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தினாா்.

அதைத் தொடா்ந்து பஞ்சப்பூா் முதல் திண்டுக்கரை வரை அரைவட்ட சுற்றுச்சாலை அமைப்பதற்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தையும் ஆய்வு செய்தாா்.

தோட்டக்கலைப் பண்ணையில் ஆய்வு:

தொடா்ந்து ஸ்ரீரங்கம் வட்டம், தொரக்குடி, அரசு தோட்டக்கலைப் பண்ணையில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை மூலம் நவீன முறையில் தக்காளி மற்றும் மிளகாய் குழித்தட்டு முறையில் நாற்று பயிா் செய்யப்பட்டுள்ளதையும், நவீன இயந்திரம் மூலம் குழித்தட்டில் விதை நாற்று பயிா் செய்யப்படுவதையும்,

ஆட்சியா் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் விமலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com