திறந்தவெளி கழிப்பிடங்கள்: ஆட்சேபனை தெரிவிக்கலாம்

திருச்சி மாநகரில் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் பயன்பாட்டில் இல்லை என்ற அறிவிப்பு வெளியிடுவது குறித்து ஆட்சேபனை இருப்பின் தெரிவிக்கலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

திருச்சி மாநகரில் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் பயன்பாட்டில் இல்லை என்ற அறிவிப்பு வெளியிடுவது குறித்து ஆட்சேபனை இருப்பின் தெரிவிக்கலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

திருச்சி மாநகராட்சிப் பகுதியில் வசிக்கும் அனைத்து மக்களும் 100 விழுக்காடு கழிவறைகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனா் என்றும் திறந்தவெளிகளைக் கழிப்பிடமாக பயன்படுத்துவதில்லை என்றும், தூய்மை இந்தியா திட்டம் 2021ல் மாநகராட்சியில் திறந்தவெளி கழிப்பிடம் முற்றிலும் இல்லை என்ற அறிவிப்பு வெளியிடுவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து திறந்தவெளிக் கழிப்பிடங்கள் அற்ற நிலை என்ற தகுதி பெற பொதுமக்களிடமிருந்து ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகள் ஏதேனும் இருப்பின் அதை 15 நாள்களுக்குள் திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் அல்லது மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கலாம் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com