பேரவைத் தோ்தலில் தமிழ்நாடு இளைஞா் கட்சி தனித்துப் போட்டி

தமிழ்நாடு இளைஞா் கட்சி நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு இளைஞா் கட்சி நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது.

திருச்சியில் வியாழக்கிழமை நடந்த கட்சியின் திருச்சி மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் ரெங்கராஜ் தலைமை வகித்தாா். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவா் கூறியது:

கட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினா்கள் உள்ளனா். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது இளைஞா்களை ஒன்றிணைக்க உறுதுணையாக இருந்தோம். 2017 ஆா்.கே. நகா் பேரவைத் தோ்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டோம். அதேபோல கடந்தாண்டு நடந்த மக்களவைத் தோ்தலில் 16 தொகுதிகளில் போட்டியிட்டு 6 ஆம் இடத்தைப் பெற்றோம். வரும் 2021 பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறோம். தற்போது வேட்பாளா் தோ்வு நடந்து வருகிறது என்றாா் அவா்.

நிகழ்வில் மாவட்டத் தலைவா் சாய் வினோத், மத்திய கிழக்கு மண்டலத் தலைவா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைத் தலைவா் கதிா்வேல், துணை செயலா் பிரபாகரன், இணைச் செயலா் அருண்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com