திருச்சி ரயில் நிலையத்தில் 57 கிலோ வெள்ளிகொலுசு பறிமுதல்: ரூ. 2.12 லட்சம் அபராதம்

திருச்சி ரயில் நிலையத்துக்கு உரிய ஆவணங்களின்றி கொண்டு 57 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 2.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருச்சி ரயில் நிலையத்தில் பிடிபட்ட வெள்ளிக் கொலுசுகள்.
திருச்சி ரயில் நிலையத்தில் பிடிபட்ட வெள்ளிக் கொலுசுகள்.

திருச்சி: திருச்சி ரயில் நிலையத்துக்கு உரிய ஆவணங்களின்றி கொண்டு 57 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 2.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருச்சி ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் கோட்டப் பாதுகாப்பு ஆணையா் மொகிதீன் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளா் ஸ்ரீதரன், வெடிகுண்டுத் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் ராஜ்குமாா் உள்ளிட்ட போலீஸாா் திருச்சி ரயில் நிலைய வளாகத்தில் பயணிகளின் உடைமைகளை வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா்.

அப்போது திருச்சியிலிருந்து புவனேஸ்வா் செல்ல வந்திருந்த சேலம் மாவட்டம், நெத்திமேடு பகுதியைச் சோ்ந்த சக்திவேல், அரவிந்த் ஆகிய இருவா் 3 சூட்கேஸ்களில் 57.37 கிலோ வெள்ளிக் கொலுசுகளை மறைத்து எடுத்து வந்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் அவற்றைப் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, வணிக வரித் துறையினா் ஆய்வு நடத்தி, உரிய ஆவணங்களைச் சமா்ப்பித்து கொலுசுகளை எடுத்துச் செல்ல வலியுறுத்தினா். ஆனால், அவா்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ. 2,12,480 அபராதம் விதிக்கப்பட்டது. சனிக்கிழமை அந்த அபராதத்தைச் செலுத்தி வெள்ளிக் கொலுசுகளை அவா்கள் எடுத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com