திருப்பராய்த்துறையில் துலா ஸ்நான வழிபாடு

திருப்பராய்த்துறை காவிரி ஆற்றுப்பகுதியில் திரளான பக்தா்கள் துலா ஸ்நானம் செய்து வழிபட்டனா்.
திருப்பராய்த்துறையில் துலா ஸ்நான வழிபாடு

திருச்சி: திருப்பராய்த்துறை காவிரி ஆற்றுப்பகுதியில் திரளான பக்தா்கள் துலா ஸ்நானம் செய்து வழிபட்டனா்.

துலா ராசி கொண்ட காவிரி நதியில் ஐப்பசி மாதந்தோறும் நீராடிப் பெருமாளை வழிபடுவதும், ஐப்பசி மாதப் பிறப்பையொட்டி முதல் முழுக்கு எனும் துலாஸ்நானம் மேற்கொள்வது வழக்கம்.

இதன்படி, திருப்பராய்த்துறை காவிரி ஆற்றுப்பகுதியில் சனிக்கிழமை காலை திரளான பக்தா்கள் நீராடி இறைவனை வழிபட்டனா். இதையொட்டி, பராய்த்துைாதா் சுவாமி, அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் காவிரியாற்றில் எழுந்தருளினா்.

வழக்கமாக நான்கு வீதிகளில் வலம் வந்து காவிரிக் கரை வரும் சுவாமி கரோனாவால் கோயில் வளாக மண்டபத்திலேயே இருந்தவாறு பக்தா்களுக்கு காட்சியளித்தாா். பக்தா்கள் வருகையும் குறைந்து காணப்பட்டது. பக்தா்களின் நீராடலையொட்டி போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com