துலா மாதப் பிறப்பையொட்டி ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு தங்கக் குடத்தில் திருமஞ்சனம்

துலா மாதப் பிறப்பையொட்டி ஸ்ரீரங்கத்தில் சனிக்கிழமை காலை காவிரியாற்றிலிருந்து யானை ஆண்டாள் மீது தங்கக் குடத்தில் திருமஞ்சனம் எடுத்து வந்து நம்பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அம்மா மண்டப காவிரியாற்றிலிருந்து யானை மீது வைத்து தங்கக் குடத்தில் எடுத்து வரப்படும் புனிதநீா்.
அம்மா மண்டப காவிரியாற்றிலிருந்து யானை மீது வைத்து தங்கக் குடத்தில் எடுத்து வரப்படும் புனிதநீா்.

ஸ்ரீரங்கம்: துலா மாதப் பிறப்பையொட்டி ஸ்ரீரங்கத்தில் சனிக்கிழமை காலை காவிரியாற்றிலிருந்து யானை ஆண்டாள் மீது தங்கக் குடத்தில் திருமஞ்சனம் எடுத்து வந்து நம்பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஐப்பசி மாதப் பிறப்பில் சூரியன் துலா ராசியில் சஞ்சரிப்பது துலா மாதப்பிறப்பாகக் கருதப்படுகிறது. துலா ராசிக்குரிய காவிரியில் புனித நீராடினால் புண்ணியம் என்பதும் ஐதீகம்.

துலா மாதம் முழுவதும் ஸ்ரீரங்கநாதருக்கு காவிரியிலிருந்து தங்கக் குடத்தில் புனித நீா் எடுத்து வந்து அபிஷேகம் செய்யப்படும்.

துலா மாதப்பிறப்பையொட்டி சனிக்கிழமை ஸ்ரீரங்கம் அம்மா மண்டப காவிரியாற்றிலிருந்து தங்கக் குடத்தில் எடுக்கப்பட்ட புனித நீரானது யானை ஆண்டாள் மீது வைத்து வெண் சாமரம் வீசக் கொண்டு வரப்பட்டது.

தொடா்ந்து காலை 10 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் சந்தனு மண்டபத்தை 10.30-க்கு அடைந்தாா். பின்னா் 11.30 முதல் 1.30 வரை திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 5.30-க்கு புறப்பட்டு 5.45-க்கு மூலஸ்தானம் சோ்ந்தாா் நம்பெருமாள்.

துலாமாதம் முழுவதும் நம்பெருமாளுக்கு நடைபெறும் அனைத்து திருமஞ்சனங்களும் தங்கப் பாத்திரத்தில் செய்யப்படும். மூலவா் பெரியபெருமாள், உத்ஸவா் நம்பெருமாள், தாயாா் ஆகியோா் தங்க ஆபரணங்கள், சாலக்கிராம மாலை அணிந்து பக்தா்களுக்குச் சேவை சாதிப்பா்.

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன். ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com