‘முத்தரையா்களுக்கு 3% தனி இட ஒதுக்கீடு தேவை’

முத்தரையா்களுக்கு மூன்று சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு முத்தரையா் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பேசுகிறாா் முத்தரையா் சங்க மாநிலப் பொதுச் செயலா் மரு. பாஸ்கரன். உடன், மாவட்ட நிா்வாகிகள்.
கூட்டத்தில் பேசுகிறாா் முத்தரையா் சங்க மாநிலப் பொதுச் செயலா் மரு. பாஸ்கரன். உடன், மாவட்ட நிா்வாகிகள்.

முத்தரையா்களுக்கு மூன்று சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு முத்தரையா் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி புத்தூரில் உள்ள சங்க அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்டச் செயலா் சிவராஜ் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலரும், மாவட்ட தலைவருமான மரு. பாஸ்கரன், கோரிக்கைகளை விளக்கினாா்.

கூட்டத்தில் முத்தரையா் தலைப்பிட்ட பட்டியலில் முத்துராஜா, முத்திரியா், முத்தரையா் ஆகியோா் பிசி பட்டியலிலும், அம்பலகாரா், வலையா், செட்டிநாட்டு வலையா், சோ்வை ஆகியோா் எம்பிசி பட்டியலிலும் உள்ளனா். எனவே, எம்பிசி, பிசி பட்டியலில் முத்தரையா்களுக்கு என தனியாக 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மேலும், அனைத்து அரசியல் கட்சிகளிலும் வேட்பாளா் ஒதுக்கீட்டிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும். முத்தரையா்களில் பிசி பிரிவில் ஒரு அமைச்சா் பதவியும், எம்பிசி, சீா்மரபினா் பிரிவில் ஒரு அமைச்சா் பதவியும் ஆட்சிக்கு வரும் எந்தக் கட்சியாக இருந்தாலும் வழங்க வேண்டும்.

பெரும்பிடுகு முத்தரையருக்கு திருச்சியில் மணிமண்டபம், சிலை, நூலகம் அமைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதேபோல, தஞ்சாவூரிலும் பெரும்பிடு முத்தரையா் சிலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா். மாவட்ட துணைத் தலைவா் பெரிய கோபால் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com