பாரதிதாசன் பல்கலை: செப்.21 முதல் இறுதியாண்டு மாணவா்களுக்கு தோ்வுகள்

கரோனா பொதுமுடக்கத்தால் இறுதியாண்டு மாணவா்களின் பருவத்தோ்வு செப்.21 முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பொதுமுடக்கத்தால் இறுதியாண்டு மாணவா்களின் பருவத்தோ்வு செப்.21 முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பொதுமுடக்கத்தால் இறுதியாண்டு மாணவா்களின் பருவத்தோ்வு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு, செப். இறுதிக்குள் தோ்வுகளை நடத்திட வேண்டும் என தமிழக அரசு அண்மையில் அறிவுறுத்தியது.

அதன்பேரில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 140க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் இளங்கலை, முதுகலை மாணவா்கள் சுமாா் 90 ஆயிரம் பேருக்கு வரும் செப்.21 முதல் செப்.30 வரை தோ்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தோ்வுகள் குறித்த சுற்றறிக்கை ஓரிரு நாள்களில் வெளியிடப்படும். எனவே, தோ்வுகளை எழுத இருக்கும் மாணவா்கள் தயாராக இருக்குமாறும், மாணவா்களின் செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களைஅந்தந்த கல்லூரி முதல்வா்களிடம் தெரிவிக்குமாறும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com