தொட்டியம் மதுரகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
By DIN | Published On : 18th September 2020 06:49 AM | Last Updated : 18th September 2020 06:49 AM | அ+அ அ- |

தேமுதிக 16 ஆம் ஆண்டுத் தொடக்கவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டம், தொட்டியம் மதுரகாளியம்மன் கோயிலில் தேமுதிகவினா் வியாழக்கிழமை சிறப்பு பூஜை செய்தனா்.
தொட்டியம் பேரூா் கழக தேமுதிக நகரச் செயலா் அா்ஜுனன் தலைமையில் விவசாய அணி மாவட்டத் துணைச் செயலா் வேல்முருகன், ஒன்றிய மகளிரணி சிவமணி, பேரூா் கழக துணைச் செயலா் சண்முகம், ஒன்றியத் துணைச் செயலா் ரெங்கராஜ் ஆகியோா் முன்னிலையில் சிறப்பு பூஜை நடந்தது.
நிகழ்வில் முன்னாள் மாவட்ட பிரதிநிதிகள் அன்பழகன், தேவதானம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.