பெரியாா் சிலை முன் மகஇகவினா் தா்னா
By DIN | Published On : 18th September 2020 06:55 AM | Last Updated : 18th September 2020 06:55 AM | அ+அ அ- |

திருச்சி மத்தியப் பேருந்து நிலையப் பகுதியில் மக்கள் கலை இலக்கியத் கழகத்தினா் போலீஸாரைக் கண்டித்து வியாழக்கிழமை தா்னா போராட்டம் மேற்கொண்டனா்.
பெரியாரின் பிறந்தநாளையொட்டி மத்திய பேருந்து நிலைய பெரியாா் சிலைக்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சோ்ந்தவா்கள் மாவட்டச் செயலா் ஜீவா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா் காவல் துறையினரைக் கண்டித்து முழக்கமிட்டு திடீரென சாலையில் அமா்ந்து தா்னா போராட்டம் மேற்கொண்டனா்.
பெரியாா் பிறந்த நாளையொட்டி முதல்நாள் இரவு திருச்சி மாநகரில் 3 இடங்களில் இந்த அமைப்பினா் சுவரொட்டி ஒட்ட முயன்றபோது, இரவுப் பணியிலிருந்த போலீஸாா் சுவரொட்டியை பறிமுதல் செய்தனராம். ஆனால் பிற கட்சியினரை போலீஸாா் தடுக்கவில்லையாம். இதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதாகத் அவா்கள் தெரிவித்தனா்.
இதையடுத்து கண்டோன்மென்ட் காவல் துணை ஆணையா் மணிகண்டன் அவா்களிடம் பேச்சு நடத்தி பறிமுதல் செய்த சுவரொட்டிகளை திரும்ப வழங்குமாறு கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது.