பொன்மலை பணிமனை முன் 6ஆம் நாளாக மறியல்
By DIN | Published On : 18th September 2020 06:55 AM | Last Updated : 18th September 2020 06:55 AM | அ+அ அ- |

தமிழகத்தில் உருவாகும் மத்திய அரசுப் பணியிடங்களில் தமிழா்கள் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சாா்பில் 6 ஆவது நாளாக வியாழக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு தமிழ்த் தேசிய பேரியக்க தலைமை செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் கோ. மாரிமுத்து தலைமை வகித்தாா். முன்னதாக தருமபுரி மாவட்டச் செயலா் விசயன் பேரணியைத் தொடங்கி வைத்துப் பேசினாா். இதில் பல்வேறு பிரிவு நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இறுதி நாளான வெள்ளிக்கிழமை நடைபெறும் மறியல் போராட்டத்தில் தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் சிறப்புரையாற்ற உள்ளாா்.