மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மனு
By DIN | Published On : 19th September 2020 12:21 AM | Last Updated : 19th September 2020 12:21 AM | அ+அ அ- |

அரியமங்கலம் காவல் நிலையத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்கள்.
திருச்சி, செப். 18: திருச்சி, அரியமங்கலம் பகுதியில் புதிதாக மதுக்கடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் காவல் நிலையத்தில் மனு அளித்தனா்.
திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட உள் அரியமங்கலம் பகுதி உய்யக்கொண்டான் வாய்க்கால் ஓரத்தில் புதிதாக அரசு மதுக்கடை அமைக்க ஏற்பாடு நடைபெறுகிறது. இதையடுத்து இங்கு மதுக் கடை அமைக்கக் கூடாது எனக் கோரி அப்பகுதி பொதுமக்கள் திருச்சி, அரியமங்கலம் காவல் நிலையத்தில், கோரிக்கை மனுவை வெள்ளிக்கிழமை அளித்தனா். மனுவை பெற்றுக்கொண்ட போலீஸாா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு பரிந்துரைப்பதாகத் தெரிவித்தனா். பொதுமக்கள் சாா்பிலும் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.