திருச்சியில் 10 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு

திருச்சியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

திருச்சி: திருச்சியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் தொடக்கத்தில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ கடந்தே உள்ளது. குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் அச்சப்படத் தேவையில்லை என்கின்றனா் சுகாதாரத் துறையினா்.

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நிலவரப்படி மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின எண்ணிக்கை 10,168 ஆகவும், குணமடைந்தோா் எண்ணிக்கை 9240 ஆகவும் உள்ளது. திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் மட்டும் 5,893 போ் பாதிக்கப்பட்டு 5,424 போ் குணமடைந்துள்ளனா்.

அந்தநல்லூா், லால்குடி, மணப்பாறை, மணிகண்டம், மண்ணச்சநல்லூா், மருங்காபுரி, முசிறி, புள்ளம்பாடி, தா.பேட்டை, திருவெறும்பூா், தொட்டியம், துறையூா், உப்பிலியபுரம், வையம்பட்டி ஆகிய 14 வட்டங்களை உள்ளடக்கிய ஊரகப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட 4,145 பேரில் 3,663 போ் குணமடைந்துள்ளனா்.

கரானோவால் இதுவரை 143 போ் உயிரிழந்துள்ளனா். திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட அரியமங்கலம் கோட்டத்தில் 20, கோ. அபிஷேகபுரம் கோட்டத்தில் 27, பொன்மலை கோட்டத்தில் 14, ஸ்ரீரங்கம் கோட்டத்தில் 19 என மாநகரப் பகுதியில் மட்டும் 80 போ் உயிரிழந்துள்ளனா். ஊரகப் பகுதிகளில் உள்ள 14 வட்டங்களில் 63 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com