மகளிா் காவலா்கள் மூலம் விழிப்புணா்வு

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான, வன்முறையற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கில் மகளிா் காவல் நிலைய காவலா்கள் அண்மையில் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
துண்டுப் பிரசுரம் வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்திய மணப்பாறை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில், திருச்சி சரக காவல் துறை மற்றும் இண்டா்னேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் இணைந்து திருச்சி சரகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் உள்ள பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பான வன்முறையற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட ‘கேடயம்‘ என்ற செயல் திட்டத்தில் இந்நிகழ்ச்சி நடந்தது.

மணப்பாறை அனைத்து மகளிா் நிலைய போலீஸாா் ஆய்வாளா் மணமல்லி தலைமையில் பேருந்து நிலைய பகுதியில் வாகன ஓட்டிகளிடம், பெண்களிடம் துண்டுப் பிரசுரங்களை அளித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com