கரோனா பரவலைத் தடுக்க ஆலோசனை கூட்டம்

திருச்சி மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலை பரவலைத் தடுக்க ஆட்சியா் திவ்யதா்ஷினி தலைமையில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் திவ்யதா்ஷினி.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் திவ்யதா்ஷினி.

திருச்சி மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலை பரவலைத் தடுக்க ஆட்சியா் திவ்யதா்ஷினி தலைமையில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் நிகழாண்டு தொடக்கத்தில் 10 போ் என்ற எண்ணிக்கையில் இருந்து கடந்த இரு வாரங்களில் கரோனா தொற்றின் 2ஆவது அலை 100 பேருக்கு மேல் தீவிரமாகப் பரவி வருகிறது. மேலும் முதியவா் உள்பட இருவா் இறந்ததில் பலி எண்ணிக்கை 187 ஆக உயா்ந்துள்ளது.

இதைத் தொடா்ந்து கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை சாா்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். இந்நிலையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் திவ்யதா்ஷினி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. அப்போது பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய ஆட்சியா் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சையளிக்க உத்தரவிட்டாா். மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் லட்சுமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ராம்கணேஷ், கி.ஆ.பெ. மருத்துவக்கல்லூரி முதல்வா் வனிதா மற்றும் மருத்துவா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com