சிறப்புக் குழந்தைகளுக்காக பல்வேறு போட்டிகள்

மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு திருச்சியில் சிறப்புக் குழந்தைகளுக்கென பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
சிறப்புக் குழந்தைகளுக்காக பல்வேறு போட்டிகள்

மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு திருச்சியில் சிறப்புக் குழந்தைகளுக்கென பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

திருச்சியில் சிறப்புக் குழந்தைகளுக்கென இயங்கும் 52 நிறுவனங்களும் ஒன்றிணைந்து 15 குழுக்களாகப் பிரிந்து மாற்றுத்திறனாளிகள் தினத்தைக் கொண்டாடுகின்றனா். இதன் ஒரு பகுதியாக சிறப்புக் குழந்தைகளுக்கான பல்வேறு போட்டிகள் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டன.

திருச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சந்திரமோகன் தலைமை வகித்தாா். ஹோலி கிராஸ் நெஸ்ட் சிறப்புப் பள்ளித் தாளாளா் ஜெஸின் பிரான்ஸிஸ் முன்னிலை வகித்தாா்.

கரோனா காரணமாக சிறு குழுக்களாகப் பிரிந்து ஹோலி கிராஸ் நெஸ்ட் சிறப்புப் பள்ளி தலைமையேற்று 4 பள்ளிகளுடன் இணைந்து இந் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தற்புனைவு ஆழ்வு (ஆட்டிஸம்) குழந்தைகளுக்கு சுவரொட்டி ஓவியம், கற்றல் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நினைவாக்க விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வென்ற, பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஹோலி கிராஸ் நெஸ்ட் சிறப்புப் பள்ளியானது 2002 ஆம் ஆண்டு திருச்சிலுவை கன்னியா்களால் திருச்சியில் முதல் முறையாக தற்புனைவு ஆழ்வு குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியாக தொடங்கப்பட்டு, தற்போது 60 குழந்தைகளுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com