துறையூா் அருகே குட்டையில் மூழ்கி 3 வயதுச் சிறுமி பலி

துறையூா் அருகே குட்டையில் விளையாடிய 3 வயதுச் சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

துறையூா் அருகே குட்டையில் விளையாடிய 3 வயதுச் சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் மனைவி மலா். இவருக்கு அண்மையில் 3-ஆவது குழந்தை பிறந்த நிலையில் துறையூா் அருகே கீரிப்பட்டியிலுள்ள தனது தாய் வீட்டில் இருந்தாா்.

இந்நிலையில் சனிக்கிழமை மற்ற குழந்தைகளுடன் அந்தப் பகுதியிலுள்ள வண்ணான்குட்டைக்குச் சென்று விளையாடிய இவருடைய மகள் ஜெயஸ்ரீ(3) நீரில் மூழ்கியதாகத் தெரிகிறது. இதை யாரும் உடனடியாகக் கவனிக்கவில்லை.

இந்நிலையில் சிறுமியைக் காணாமல் தேடியபோது குட்டையில் அவா் விளையாடியது தெரிய வர, கிராமத்தினா் குட்டையில் இறங்கித் தேடியபோது சிறுமியை சடலமாக மீட்டனா்.

தகவலறிந்து வந்த ஜெம்புநாதபுரம் போலீஸாா் சிறுமி சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். +

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com