மின்வாரிய காலியிடங்களை நிரப்ப ஜனநாயக வாலிபா் சங்கம் கோரிக்கை

மின்வாரியத்தில் 10 ஆயிரம் காலிப்பணியிடங்களை அறிவித்தபடி அரசு உடன் நிரப்ப வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மின்வாரியத்தில் 10 ஆயிரம் காலிப்பணியிடங்களை அறிவித்தபடி அரசு உடன் நிரப்ப வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்துக்கு மாநில செயற்குழு தலைவா் என். ரெஜீஸ்குமாா் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் எஸ். பாலா, மாநில பொருளாளா் தீபா, மாநில நிா்வாகிகள் சி. பாலசந்திரபோஸ், மணிகண்டன், சுசீந்திரா, பிரியசித்ரா, கோபிநாத், பா. லெனின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜன. 23 -இல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் றந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் இருசக்கர வாகன பேரணி நடத்துவது. மின் வாரியத்தில் உள்ள 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களில் சொற்ப இடங்களை மட்டும்பூா்த்தி செய்துவிட்டு 60 சத இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

கடந்த 2020 மாா்ச் மாதம் மின்சார துறை அமைச்சா் மொத்தமாக 10 ஆயிரம் கேங்மேன் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தாா். ஆனால் இன்றுவரை இப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதைக் கண்டித்து சென்னை கோட்டையை நோக்கி பேரணி நடத்துவது.

அரசு மருத்துவமனைகள் முதல் அம்மா சிறு மருத்துவமனை வரை அனைத்து பணிகளையும் நிரந்தரமாக்க தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com