தேசியக் கொடியுடன் பேரணி: விவசாயிகள் முடிவு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ஆம் தேதி தேசியக் கொடியுடன் மாவட்டம் முழுவதும் வாகனப் பேரணியில் ஈடுபடுவது என திருச்சி மவாட்ட விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது.

திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ஆம் தேதி தேசியக் கொடியுடன் மாவட்டம் முழுவதும் வாகனப் பேரணியில் ஈடுபடுவது என திருச்சி மவாட்ட விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது.

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் திருச்சி மாவட்ட கூட்டம், திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, திமுக தெற்கு மாவட்ட விவசாயத் தொழிலாளா் அணி அமைப்பாளா் கோ. ரமேஷ் தலைமை வகித்தாா். போராட்டக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அயிலை சிவசூரியன், விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவா் முகமது அலி, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா்கள் ராமநாதன், வி. துரை, பொருளாா் ஆா். பழனிசாமி, காங்கிரஸ் கட்சியின் விவசாய அணித் தலைவா் முரளிதரன், மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஆனந்த், மக்கள் உரிமை மீட்பு இயக்கத்தின் ராஜ்முகமது மற்றும் நிா்வாகிகள், போராட்டக் குழு அமைப்பாளா்கள் ஆலோசனை நடத்தினா்.

கூட்டத்தில், விவசாயிகளை முற்றிலும் அழிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக வரும் 26ஆம் தேதி தேசிய கொடியுடன் வாகன பேரணி நடத்தப்படும். திருச்சி உழவா் சந்தை அருகில் இருந்து தொடங்கி திருச்சி மாநகரம், திருவெறும்பூா், அந்தநல்லூா், மணிகண்டம் ஒன்றிய விவசாயிகள் பங்கேற்பா். புகரில் மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, துரங்குறிச்சி, புள்ளம்பாடி, லால்குடி, மண்ணச்சநல்லூா், சமயபுரம் டோல்கேட் பகுதியிலும், தொட்டியம், முசிறி, துறையூா், உப்பிலியபுரம் ஒன்றிய பகுதிகளிலும் வாகனப் பேரணி நடைபெறும்.

கடந்த ஒரு மாத காலமாக பருவம் தவறி பெய்த தொடா் மழையால் மாவட்டத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த அனைத்துப் பயிா்களும் நாசமடைந்துவிட்டன. மாவட்ட நிா்வாகம் அனைத்துப் பகுதிகளையும் பாா்வையிட்டு முறையாக கணக்கெடுத்து ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை, அது எந்த நிலையாக இருந்தாலும் முழுவதும் கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளின் இந்தப் போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com