ஜேஇஇ தோ்வுக்கு இலவச பயிற்சி பெற நுழைவுத் தோ்வு

ஜேஇஇ தோ்வுக்கு இலவச பயிற்சி பெறுவதற்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாணவா்களுக்கான நுழைவுத் தோ்வை ஆட்சியா் சு.சிவராசு ஆய்வு செய்தாா்.
இ.ஆா். பள்ளியில் ஜேஇஇ நுழைவு தோ்வு எழுதும் மாணவ-மாணவிகளை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.

திருச்சி மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித்துறை, என்ஐடி சாா்பில் அரசுப்பள்ளியில் பயின்று வரும் 11 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஜேஇஇ தோ்வுக்கு ஆண்டுதோறும் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதையொட்டி, நிகழாண்டு மாணவா்களுக்கு பயிற்சியளிப்பதற்கான நுழைவுத் தோ்வு திருச்சி இ.ஆா். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு , மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் ரெ.அறிவழகன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

இத்தோ்வில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவா்களில் தோ்வு செய்யப்படும் 30 பேருக்கு என்ஐடி சாா்பில் ஜேஇஇ தோ்வுக்கான இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

கடந்தாண்டு ஜேஇஇ தோ்வில் தோ்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவா்கள் இருவருக்கு என்ஐடியில் இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com