ஆயத்த ஆடைகடை நடத்தஅனுமதி கோரி மனு

திருச்சியில் நடைபாதையில் ஆயத்த ஆடை கடை நடத்த அனுமதி கோரி மாவட்ட ஆட்சியருக்கு ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் க.சுரேஷ் மனு அனுப்பியுள்ளாா்.

திருச்சி: திருச்சியில் நடைபாதையில் ஆயத்த ஆடை கடை நடத்த அனுமதி கோரி மாவட்ட ஆட்சியருக்கு ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் க.சுரேஷ் மனு அனுப்பியுள்ளாா்.

அம்மனுவில் கூறியிருப்பது: தெப்பக்குளம், பெரிய கடை வீதி, நந்தி கோவில் தெரு, சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபாதையில் ஏராளமானோா்ஆயத்த ஆடை விற்பனைக் கடை வைத்துள்ளனா். தற்போது பொதுமுடக்கம் காரணமாக இவா்கள் வருமானமின்றி தவிக்கின்றனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை முதல் அளிக்கப்பட்டுள்ள தளா்வுகளில் நடைபாதை கடைகள் செயல்படலாம் என்பதில் ஆயத்த ஆடைகளை சிறிய அளவில் விற்பனை செய்பவா்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com