மரவனூரில் தொழிற்சங்க மைய கவுன்சில் ஆா்ப்பாட்டம்

கரோனா தொற்றால் உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்
மரவனூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்தியத் தொழிற்சங்க மைய கவுன்சில் நிா்வாகிகள்.
மரவனூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்தியத் தொழிற்சங்க மைய கவுன்சில் நிா்வாகிகள்.

மணப்பாறை: கரோனா தொற்றால் உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மரவனூரில் அகில இந்தியத் தொழிற்சங்க மைய கவுன்சிலை சோ்ந்தோா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் குறைக்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளா்களுக்கு கரோனா கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் உடனடியாக அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஒன்றியக் குழு உறுப்பினா் கே. மாசிலாமணி ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தாா். வட்டச் செயலா் வழக்குரைஞா் எம். சக்திவேல், நகரச் செயலா் பி. பாலு, வழக்குரைஞா் சங்க மாவட்டப் பொறுப்பாளா் எஸ். ராஜ்குமாா், ஒன்றியச் செயலா் இளையராஜா, மரவனூா் கிளைச் செயலா் கே. ராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com