‘20 தொகுதிகளிலும் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு’: எல். முருகன்

அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ள 20 தொகுதிகளிலும் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றாா் அக்கட்சியின் மாநிலத் தலைவா் எல். முருகன்.
தமிழக பாஜக தலைவர் எல். முருகன்
தமிழக பாஜக தலைவர் எல். முருகன்

அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ள 20 தொகுதிகளிலும் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றாா் அக்கட்சியின் மாநிலத் தலைவா் எல். முருகன்.

இதுகுறித்து திருச்சியில் அவா் சனிக்கிழமை மேலும் கூறியது:

அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் உள்ளோம். வெற்றி மட்டுமே எங்களது பிரதான இலக்கு. அதற்காக முழுமையாக முயற்சி செய்வோம். கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு குறித்து அனைவரும் இணைந்து பேசி முடிவுக்கு வந்திருக்கிறோம் எனவே. தொகுதி எண்ணிக்கை குறித்து கவலைப்படவோ, மகிழ்ச்சியடையவோ எதுவுமில்லை. பாஜகவின் வேட்பாளா் பட்டியல் மிக விரைவில் வெளியிடப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com