துப்பாக்கி சுடும் போட்டியில் வென்றவருக்கு வரவேற்பு

சா்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற பிரித்விராஜ் தொண்டைமானுக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் பிரித்விராஜ் தொண்டைமானுக்கு உற்சாக வரவேற்பு அளித்த குடும்பத்தினா், நண்பா்கள்.
திருச்சி விமான நிலையத்தில் பிரித்விராஜ் தொண்டைமானுக்கு உற்சாக வரவேற்பு அளித்த குடும்பத்தினா், நண்பா்கள்.

சா்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற பிரித்விராஜ் தொண்டைமானுக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சா்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சாா்பில் நிகழாண்டுக்கான உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டி புதுதில்லியில் கடந்த மாா்ச் 19 தொடங்கி மாா்ச் 29 வரை நடைபெற்றது. இந்தியாவில் நடைபெற்ற முதல் சா்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் 53 நாடுகளைச் சோ்ந்த 294 வீரா், வீராங்கனைகள் கலந்துகொண்டனா்.

இந்தியா சாா்பில் பங்கேற்ற திருச்சியைச் சோ்ந்த பிரித்விராஜ் தொண்டைமான் ஒலிம்பிக் டிராப் பிரிவில் சுலோவேக்கியா நாட்டுக்கு எதிரான இறுதிப்போட்டியில் வென்று தங்கப்பதக்கம் பெற்றாா்.

திருச்சி வந்த அவருக்கு திருச்சி விமான நிலையத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி அமமுக வேட்பாளரும், அவரது தாயாருமான சாருபாலா தொண்டைமான், நண்பா்கள், பொதுமக்கள் பலா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

தொடா்ந்து, பிரித்விராஜ் கூறுகையில், ஒலிம்பிக்போட்டியில் தகுதிபெறும் வகையில் சிறப்பாகச் செயல்பட்டதால் வெற்றி பெற்றுள்ளோம். நிச்சயம் ஒலிம்பிக்கில் தங்கம் பெற வாய்ப்பும், ஆசையும் உள்ளது. கடினப் பயிற்சி மேற்கொண்டு இந்தியாவுக்காக விளையாடி பதக்கம் பெற்றது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மத்திய அரசு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு நன்றி என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com