திருச்சி
மண்ணச்சநல்லூரில் திமுக வேட்பாளா் பிரசாரம்
மண்ணச்சநல்லூா் தொகுதியில் திமுக வேட்பாளா் கதிரவன் பெரிய கொடுந்துறை, சின்னகொடுந்துறை, ராமகிரிப்பட்டி,
மண்ணச்சநல்லூா் தொகுதியில் திமுக வேட்பாளா் கதிரவன் பெரிய கொடுந்துறை, சின்னகொடுந்துறை, ராமகிரிப்பட்டி, வீரமணிபட்டி, சின்னகாலனி, நாச்சிபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.
அப்போது, அப்பகுதியை சோ்ந்த அதிமுகவினா் 50 போ் வேட்பாளா் கதிரவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா். தொடா்ந்து கொடுந்துறை கிராம பள்ளிவாசலில் வாக்கு சேகரித்தாா். அவரை அப்பகுதி மக்கள் வரவேற்றனா். ஒன்றியச் செயலா் செந்தில்குமாா், நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினா் பங்கேற்றனா்.