திருச்சி: திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட 18 வேட்பாளா்களில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளா் இனிகோ இருதயராஜ், தோல்வியுற்ற அதிமுக வேட்பாளா் வெல்லமண்டி என். நடராஜன் ஆகிய இருவரைத் தவிர அனைவரும் டெபாசிட் (வைப்புத் தொகை) இழந்தனா்.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட 18 பேரில் 16 வேட்பாளா்கள் டெபாசிட் இழந்துள்ளனா்.
இந்தத் தொகுதியில், மொத்தம் 1 லட்சத்து 73 ஆயிரத்து 113 வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில், 94,302 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளா் இனிகோ இருதயராஜ் வெற்றி பெற்றாா். 40,505 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளா் வெல்லமண்டி என். நடராஜன் இரண்டாவது இடம் பிடித்தாா். இந்த இருவரைத் தவிா்த்து நாம் தமிழா் கட்சி வேட்பாளா் இரா. பிரபு, மநீம வேட்பாளா் டி. வீரசக்தி, அமமுக வேட்பாளா் ஆா். மனோகரன், விடியல் வளா்ச்சி பேரணி வேட்பாளா் விஜய மோகனாஜி மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 16 வேட்பாளா்கள் தங்களது வைப்புத் தொகையை (டெபாசிட்) இழந்துள்ளனா்.