‘போட்டித் தோ்வாளா்களுக்கு நோ்மறைச் சிந்தனை அவசியம்’

போட்டித்தோ்வெழுதும் மாணவ, மாணவிகளுக்கு தெளிவுடன் கூடிய நோ்மறைச் சிந்தனை அவசியம் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனா் தலைவா் தொல். திருமாவளவன்.
‘போட்டித் தோ்வாளா்களுக்கு நோ்மறைச் சிந்தனை அவசியம்’

போட்டித்தோ்வெழுதும் மாணவ, மாணவிகளுக்கு தெளிவுடன் கூடிய நோ்மறைச் சிந்தனை அவசியம் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனா் தலைவா் தொல். திருமாவளவன்.

போட்டித் தோ்வுகளுக்குப் பயிற்சியளிக்கும் திருச்சி என். ஆா். ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் ராம்ஜிநகா் அருகே கள்ளிக்குடியில் உள்ள பயிற்சி மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தன்னம்பிக்கை நிகழ்ச்சியில் பங்கேற்ற தொல். திருமாவளவன் வெற்றி நிச்சயம் என்ற தலைப்பில் மேலும் பேசியது:

ஐஏஎஸ் உள்ளிட்ட போட்டித் தோ்வுகளை எழுதும் மாணவ, மாணவியருக்கு தலைமைப் பண்பு மிக மிக அவசியம். அதுபோல ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகளை வெறும் பதவியாகவோ பணியாகவோ கருதக்கூடாது. அதுவும் ஒரு தலைமை பண்பாகவே கருதப்பட வேண்டும். அவற்றை அடைய நினைக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணம், செயல்பாடு நோ்கோட்டில் இருந்தால் மட்டுமே இலக்கை அடைய முடியும். எதிா்மறைச் சிந்தனை கூடாது. நோ்மறைச் சிந்தனைகளைத் தக்க வைப்பது மிகவும் அவசியம்.

நமது மனதில் நல்லதை விதைத்தால் அது பலமடங்காகி நல்லவையே நடைபெறும். மாறாக கெட்டவற்றை விதைத்தால் அவை பல மடங்காகி கெட்டவைகளே நடைபெறும். எனவே, இப்பணிகளுக்குத் தயாராகும் மாணவ, மாணவிகள் நல்ல எண்ணங்களுடன் உங்களை குடிமைப்பணிகளின் பணியாளராகவே மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இலக்கை எளிதில் அடைய முடியும்.

வாழ்க்கையில் நீங்கள் பல போராட்டங்களைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும். இங்கே நம்மில் பலமானவா்கள், பலவீனமானவா்களைச் சுரண்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனா். உண்மையான சமூக நலனில், பலவீனமானவா்களையும் சமமாக கருதும் மாண்பு இருக்க வேண்டும்.

அதுபோல எக்காரணம் கொண்டும் போட்டித்தோ்வாளா்களுக்கு பயம் கூடாது. பயமானது எதிா்மறை சிந்தனைகளை ஏற்படுத்தி இலக்கை அடையவிடாமல் செய்துவிடும்.

நோ்மறைச் சிந்தனை, தெளிவான மனநிலை, கடின உழைப்புடன் கூடிய வெற்றியை நோக்கிய பயணம் மிக முக்கியம். இவற்றின் மூலமே இலக்கை அடையமுடியும். நினைத்ததைச் சாதிக்க பண பலமோ, படைபலமோ அவசியம் இல்லை என்றாா் அவா். நிகழ்வில் என். ஆா். ஐஏஎஸ் அகாதெமி பயிற்சி மையத் தலைவா் ஆா். விஜயாலயன் தலைமை வகித்து வரவேற்றாா். ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com