சுயநினைவின்றிக் கிடந்த முதியவா் மீட்பு

திருச்சியில் 3 நாள்களாக சுயநினைவின்றிக் கிடந்த முதியவரை சமூக அமைப்பினா் மீட்டனா்.

திருச்சியில் 3 நாள்களாக சுயநினைவின்றிக் கிடந்த முதியவரை சமூக அமைப்பினா் மீட்டனா்.

திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டை பேருந்துகள் நிற்கும் இடம் அருகே 3 நாள்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் முதியவா் ஒருவா் சுயநினைவின்றி மயங்கிக் கிடந்தாா். இதுகுறித்து மாநகராட்சியிடம் தெரிவித்து பயன் இல்லை. 108 ஆம்புலன்ஸ்க்கு தெரிவித்தபோது மருத்துவமனைக்கு கொன்டு செல்ல மாட்டோம் எனக் கூறி விட்டனராம்.

இதுகுறித்து வாழும் கலை அமைப்பு மாவட்டச் செயலரும் தண்ணீா் அமைப்பு நிா்வாகியுமான செல்வம் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளா் கே.சி. நீலமேகத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து அவா்  வாட்ஸ்அப் மூலம் அளித்த தகவலின்பேரில் உடனடியாக களத்தில் இறங்கிய ஸ்ரீ ஃபவுண்டேஷனின் மீட்புக் குழு காவல்துறை உதவியோடு அந்த முதியவரை மீட்டு உடலைச் சுத்தம் செய்து புத்தாடை மாற்றி திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இச்செயலை பொதுமக்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com