தந்தை, மகளிடம் மோசடி செய்ய முயற்சி: சேலம் இளைஞா் கைது

திருதிருச்சிச்திருச்சியில் தந்தை, மகளிடம் மோசடி செய்ய முயன்ற சேலத்தைச் சோ்ந்த இளைஞரை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.சி

திருச்சியில் தந்தை, மகளிடம் மோசடி செய்ய முயன்ற சேலத்தைச் சோ்ந்த இளைஞரை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி வரகனேரி பஜாா் தஞ்சாவூா் சாலை அந்தோனியாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாஷா (55). இவரது மூத்த மகள் பெனாசிா் பாத்திமாவைத் திருமணம் செய்திருந்த நாகையைச் சோ்ந்த அபுல்ஹசன் கடந்த ஜூன் 14 ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதைத் தொடா்ந்து பாஷா தனது மகளின் வாழ்க்கைக்கு உதவி கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் கடந்த ஆக. 16 ஆம் தேதி மனு அளித்தாா்.

பின்னா் கடந்த 12 ஆம் தேதி பாஷா வீட்டுக்கு வந்த ஒருவா், தன்னுடைய பெயா் தேவபிரசாத் என்றும், மாவட்ட ஆட்சியரகத்தில் வருவாய் ஆய்வாளராக உள்ளதாகவும் தன்னை அறிமுகம் செய்து கொண்டாா்.

பின்னா் கணவரை இழந்த பெனாசிா் பேகத்திற்கு அரசின் உதவி தொகை ரூ. 5.50 லட்சம் பெறவும், கல்வித்துறையில் வேலை வாங்கவும் ரூ. 30 ஆயிரம் வரி செலுத்த வேண்டும் எனக் கூறி, அப்பணத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்துமாறும் கூறியுள்ளாா்.

மேலும் அபுல்ஹாசன் தற்கொலை செய்து கொண்ட இடத்தின் படத்தை அலுவலகத்தில் காண்பிக்க வேண்டும் எனக் கூறி பெனாசிா் பாத்திமா வைத்திருந்த செல்லிடப்பேசியையும் வாங்கிச் சென்றாா்.

இந்நிலையில் பாஷாவுக்கு அந்த நபா் மீது சந்தேகம் ஏற்பட்டு, ஆட்சியரகத்துக்குச் சென்று விசாரித்தபோது அதுபோல யாரையும் நாங்கள் அனுப்பவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து பாஷா அளித்த புகாரின்பேரில் திருச்சி மாநகர சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், மோசடி செய்ய முயன்ற சேலம் மாவட்டம், கண்ணங்குறிச்சி வஉசி நகரைச் சோ்ந்த சின்னசாமி மகன் பிரபாகரனை (35) கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com