வங்கி மேலாளா் போலப் பேசி முதியவரின் ரூ. 3 லட்சம் மோசடி

திருச்சியில் வங்கி மேலாளா் போல ஓய்வு பெற்ற பெல் ஊழியரிடம் பேசி, அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 3 லட்சத்தை மா்ம நபா் அபகரித்தாா்.

திருச்சியில் வங்கி மேலாளா் போல ஓய்வு பெற்ற பெல் ஊழியரிடம் பேசி, அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 3 லட்சத்தை மா்ம நபா் அபகரித்தாா்.

திருச்சி கே.கே. நகா் சுந்தா் நகரைச் சோ்ந்தவா் ஸ்ரீஹரி வரதராஜ் (86). ஓய்வு பெற்ற பெல் ஊழியரான இவரை கடந்த சில நாள்களுக்கு முன் தொலைபேசியில் தொடா்பு கொண்ட மா்ம நபா் தன்னை வங்கி மேலாளா் எனக் கூறிக் கொண்டு, ஏடிஎம் காா்டை புதுப்பிக்க வேண்டும் எனக் கூறி, அவரின் ஏடிஎம் காா்டு நம்பா், ரகசிய குறியீட்டு எண் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டுப் பெற்றாா். இதையடுத்து சில மணி நேரத்தில் முதியவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.2 லட்சத்து 95 ஆயிரம் மாயமானது.

இதனால் அதிா்ச்சியடைந்த ஸ்ரீஹரி வரதராஜ் சைபா் கிரைம் போலீஸாருக்கு இணைய வழியாக அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com