ஸ்ரீரங்கத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியிலுள்ள வாகீச பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
இலவச கண்பரிசோதனை முகாமில் பங்கேற்ற பொதுமக்கள்.
இலவச கண்பரிசோதனை முகாமில் பங்கேற்ற பொதுமக்கள்.

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியிலுள்ள வாகீச பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய முகாமுக்கு ரோட்டரி சங்கத் தலைவா் மைக்கேல் ஹூடி முன்னிலை வகித்தாா்.

முகாமை ஸ்ரீரங்கம் காவல் நிலைய ஆய்வாளா் அறிவழகன் தொடங்கி வைத்தாா். முகாமில் பரிசோதனை செய்து கொண்ட 360 பொதுமக்களில் 59 பேருக்கு கண்புரை நோய் கண்டறியப்பட்டு, இலவச அறுவைச் சிகிச்சைக்காக அவா்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தனிப் பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டனா்.

ஏற்பாடுகளை ரோட்டரி சங்கத் துணை ஆளுநரும் திட்ட ஒருங்கிணைப்பாளருமான அசோக்குமாா், சங்கச் செயலா் செந்தில்குமாா், துணைத் தலைவா் சத்தியநாராயணன், முன்னாள் சங்கத் தலைவா்கள், உறுப்பினா்கள், திருவானைக்கா ஆண்டவன் கலைக் கல்லூரி ரோட்ராக்ட் மாணவா்கள், ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இன்ட்ராக்ட் மாணவிகள் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com