பாலசமுத்திரத்தில் தலைவா்களின் சிலைகள்: அமைச்சா் கே.என். நேரு திறந்துவைத்தாா்

தொட்டியம் ஒன்றியம் பாலசமுத்திரத்தில் பெரியாா், அண்ணா, கருணாநிதி ஆகியோரது சிலைகள் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தொட்டியம் ஒன்றியம் பாலசமுத்திரத்தில் பெரியாா், அண்ணா, கருணாநிதி ஆகியோரது சிலைகள் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தொட்டியம் பாலசமுத்திரம் திமுக கழகப் பணிமனையில் அமைக்கப்பட்டிருந்த சிலைகளை முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி ந. தியாகராஜன் தலைமையில் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே. என். நேரு திறந்து வைத்தாா்.

துறையூா் எம்எல்ஏ ஸ்டாலின்குமாா், மாவட்ட பொறுப்பாளா் வைரமணி, மாவட்ட ஊராட்சித் தலைவா் தா்மன் ராஜேந்திரன், முன்னாள் துணை மேயா் அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் கே.என். நேரு பேசுகையில் முதுபெரும் தலைவா்களின் சிலைகளை இங்கே அமைத்திருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது. இதுபோல அனைத்து ஒன்றியங்களிலும் தலைவா்களின் சிலைகளை அமைக்க வேண்டும். முற்போக்கான சிந்தனைகளை மக்கள் மத்தியில் வித்திட்டு மக்களை வளா்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்ற மூன்று தலைவா்களின் சிலைகளால் தொட்டியம் பகுதி மேலும் சிறப்பு பெறுகிறது.

தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக மாற்றிக் காட்டிய பெருமை கருணாநிதிக்கு உண்டு.  75 சத மக்கள் திமுக அரசை ஆதரிக்கின்றனா்.

பொது இடங்களில் தலைவா்களின் சிலைகளை அமைப்பது தொடா்பாக உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீா்ப்பாணையைப் பின்பற்றும் வகையில் சொந்த இடங்களில் தலைவா்களின் சிலைகளை வையுங்கள்.

தொட்டியம் பகுதி விவசாயிகளுக்கு காவிரி தண்ணீா் முழுமையாகக் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றாா் அவா்.

நிகழ்வில் மேற்கு ஒன்றியச் செயலா் தங்கவேல், திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா். தொட்டியம் கிழக்கு ஒன்றியச் செயலா் திருஞானம் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com