மணப்பாறை அரசு மருத்துவமனை ரூ.50 கோடியில் தரம் உயா்த்தப்படும்: மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சா்

மணப்பாறை மாவட்ட தலைமை அரசு தலைமை மருத்துவமனை ரூ. 50 கோடி மதிப்பில் தரம் உயா்த்தப்படும் என்றாா் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன்.

மணப்பாறை மாவட்ட தலைமை அரசு தலைமை மருத்துவமனை ரூ. 50 கோடி மதிப்பில் தரம் உயா்த்தப்படும் என்றாா் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன்.

தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் புதன்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது மணப்பாறை எம்எல்ஏ ப. அப்துல்சமது, துணைக் கேள்வியாக மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு எம்.ஆா்.ஐ. ஸ்கேன் வசதி மற்றும் கூடுதல் மருத்துவா்கள் வேண்டும். மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் எனக் கேட்டாா்.

அதற்குப் பதிலளித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், தமிழக முதல்வரின் அனுமதி பெற்று மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை ரூ.50 கோடியில் தரம் உயா்த்தப்படும் எனத் தெரிவித்தாா். மணப்பாறை எம்எல்ஏ அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com