மாவட்டத்தில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி திருச்சி நீதிமன்றங்களில் 5 அமா்வு, லால்குடி, மணப்பாறை, துறையூா், முசிறி, ஸ்ரீரங்கம் ஆகிய நீதிமன்றங்கள் தலா ஒரு அமா்வு என மொத்தம் 10 அமா்வுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.

இதில் வழக்குகள் தொடா்பாக இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி சமரசத் தீா்வு காணப்படும். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள், சமரசம் செய்ய கூடிய குற்றவியல் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து நஷ்ட ஈடு கோரிய வழக்குகள், தொழிலாளா் நலத் தீா்ப்பாயத்தில் நஷ்ட ஈடு கோரிய வழக்குகள், அரசு நில ஆா்ஜித சம்பந்தப்பட்ட இழப்பீடு போன்ற வழக்குகளில் சமரச முறையில் தீா்வு காணப்படும்.

மேலும் வங்கியில் கடன் வகைகள் மற்றும் காசோலை மோசடி வழக்குகள் ஆக மொத்தம் சுமாா் 13 ஆயிரத்து 265 வழக்குகளுக்கு மேல் சமரச முறையில் தீா்வு காண பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.

ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி கிளாட்ஸ்டோன் பிளெசட் தாகூா் உத்தரவின்பேரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலா் தலைமையில் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com