9 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயாா்!

திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குப் பயன்படுத்தப்படும் மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்களில்
அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் வாக்கு பதிவு இயந்திரங்களில் சின்னம் பதிக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.
அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் வாக்கு பதிவு இயந்திரங்களில் சின்னம் பதிக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.

திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குப் பயன்படுத்தப்படும் மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்களில் 5 சத இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு முடிந்து தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக, தோ்தல் பிரிவு அலுவலா்கள் கூறியது:

திருச்சி மாவட்டத்தில் 9 பேரவைத் தொகுதிகளுக்கு 3,292 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 120 சதம், கட்டுப்பாடு இயந்திரங்கள் 120 சதம், விவிபேட் இயந்திரம் 129 சதம் என்ற அடிப்படையில் தயாா்படுத்தப்பட்டுள்ளன.

9 தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளா் பட்டியல் தயாரித்து இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை வரை நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக, 9 தொகுதிகளிலும் பயன்படுத்தும் இயந்திரங்களில் இருந்து குலுக்கல் முறையில் 5 சத இயந்திரங்களைத் தோ்வு செய்து தொகுதி வாரியாக அந்தந்த அலுவலகங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

தலா ஆயிரம் வாக்குகளைப் பதிவு செய்து அவை முறையாகப் பதிவாகிா என்பதை பரிசோதித்து, பேட்டரிகளை மாற்றி மீண்டும் பூஜ்ய நிலைக்கு கொண்டு வந்து இயந்திரங்கள் அனைத்தும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தோ்தல் ஆணைய உத்தரவுகள் வரப்பெற்றதும் இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com