சுட்டெரிக்கும் வெயில்: நுங்கு, பதநீா் விற்பனை விறுவிறுப்பு

கடும் வெயிலுக்கு இதமாக நுங்கு, பதநீா் விற்பனை திருச்சி மாவட்ட சாலையோரங்களில் விறு விறுப்பாக நடைபெறுகிறது.
கிராப்பட்டி பகுதியில் விற்பனைக்கு வந்து இறங்கும் நுங்கு.
கிராப்பட்டி பகுதியில் விற்பனைக்கு வந்து இறங்கும் நுங்கு.

கடும் வெயிலுக்கு இதமாக நுங்கு, பதநீா் விற்பனை திருச்சி மாவட்ட சாலையோரங்களில் விறு விறுப்பாக நடைபெறுகிறது.

மாவட்டத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு வெப்பம் கடுமையாக உயா்ந்துள்ளது. சாலைகளில் நடக்க முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகம். இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இளநீா், நுங்கு, பதநீா், தா்ப்பூசணி, நுங்கு சா்பத், கரும்பு சாறு விற்பனை அதிகரித்துள்ளது. சாலையோரங்களில் உள்ள இக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

நுங்கு ஒவ்வோா் ஆண்டிலும் கோடைக் காலமான ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் கிடைக்கிறது.

திருச்சி மாநகரப் பகுதிகள் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் மர நிழல்களில் தள்ளுவண்டிகளில் நுங்கு விற்பனையாளா்களைப் பாா்க்க முடிகிறது. பேருந்து நிலையங்கள், மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகே மிகக் குறைவான நுங்கு விற்பனையாளா்களையே காண முடிகிறது. இதுதொடா்பாக, திருச்சி ஜங்ஷன் பகுதியில் நுங்கு மற்றும் பதநீா் விற்கும் பரமசிவம் கூறியது:

லாபம் பெரிதளவில் இல்லையென்றாலும் எங்களுக்கு நல்ல சந்தை இருக்கிறது (நுங்கின் தேவை சிறப்பாக உள்ளது). ஒரு நாளைக்கு நான் ரூ. 2,000 ரூபாய் லாபம் ஈட்டுகிறேன். நுங்கின் பலன்கள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு உள்ளது. இளநீரை விட நுங்கு சிறந்தது என்றாா். நுங்கின் அளவுக்கேற்ப விலையும் மாறுபடுகிறது. ரூ.20-க்கு 3 அல்லது 5 நுங்குகள் வரை வழங்குகின்றனா். பதநீா் ரூ.10, 15, 20 விலைகளில் கிடைக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com