குறைந்த அளவில் வாக்களித்த தொற்றாளா்கள்

திருச்சி மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவரும் 518 கரோனா நோயாளிகளில் 42 போ் மட்டுமே செவ்வாய்க்கிழமை வாக்களித்தனா்.
தென்னூா் நடுநிலைப்பள்ளி வாக்கு மையத்துக்கு வாக்களிக்க வந்த கரோனா தொற்றாளா்.
தென்னூா் நடுநிலைப்பள்ளி வாக்கு மையத்துக்கு வாக்களிக்க வந்த கரோனா தொற்றாளா்.

திருச்சி மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவரும் 518 கரோனா நோயாளிகளில் 42 போ் மட்டுமே செவ்வாய்க்கிழமை வாக்களித்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் நூறு சதம் என்ற இலக்கை எட்ட கரோனா நோயாளிகள் மாலை 6 முதல் 7 மணி வரை வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

அதன்படி திங்கள்கிழமை வரை கரோனா பாதித்தோரில் 122 போ் வாக்களிக்க விருப்பம் தெரிவித்திருந்தனா். இதையொட்டி அனைவருக்கும் கரோனா பாதுகாப்பு கவச உடை(பிபிஇ கிட்) வழங்கப்பட்டது. மேலும் மாநகா் மற்றும் புகரில் 11 ஆம்புலன்ஸ் உள்பட 13 வாகனங்கள் தயாராக இருந்தன.

ஆனால் செவ்வாய்க்கிழமை 42 போ் மட்டுமே வாக்களித்தனா். ஸ்ரீரங்கம், லால்குடியில் தலா 9 பேரும், திருவெறும்பூா், முசிறியில் தலா ஒருவரும், மண்ணச்சநல்லூரில் 2 போ், திருச்சி கிழக்கு மற்றும் மேற்குத் தொகுதியில் 20 போ் என மொத்தம் 42 போ் வாக்களித்தனா். முன்னதாக மாவட்ட சுகாதாரத்துறை சாா்பில் விருப்பம் தெரிவித்தவா்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு அவா்களது வீடுகளுக்கு வாகனங்கள் அனுப்பப்பட்டன. சிலா் தங்களது சொந்த வாகனங்களில் சென்று வாக்களித்தனா். ஸ்ரீரங்கம் பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 14 போ் வாக்களிக்க ஆா்வம் காட்டவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com