திருச்சி கிழக்கு வேட்பாளா்கள் வாக்குப்பதிவு

திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளா்கள் தங்களது வாக்குகளை செவ்வாய்க்கிழமை பதிவு செய்தனா்.
திருச்சி கிழக்கு வேட்பாளா்கள் வாக்குப்பதிவு

திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளா்கள் தங்களது வாக்குகளை செவ்வாய்க்கிழமை பதிவு செய்தனா்.

அதிமுக: தமிழக சுற்றுலாத் துறை அமைச்சரும், அதிமுக மாநகா் மாவட்டச் செயலருமான வெல்லமண்டி என். நடராஜன், பாலக்கரை பகுதியில் உள்ள இஸ்லாமிய பள்ளியில் வாக்களித்தாா்.

திமுக: கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவரும், திருச்சி கிழக்குத் தொகுதி வேட்பாளருமான இனிகோ இருதயராஜ், சென்னையில் வாக்களித்துவிட்டு திருச்சி கிழக்குத் தொகுதிக்கு வந்து வாக்குச் சாவடிகளை ஆய்வு செய்தாா்.

அமமுக: அமமுக பொருளாளா் ஆா். மனோகரன், திருவானைக்கா பகுதி வாக்குச் சாவடியில் வாக்களித்தாா்.

மநீம: வேட்பாளா் டி. வீரசக்தி, செம்பட்டு பகுதியில் ஏஎம்ஆா்சி பள்ளி வாக்குச் சாவடியிலும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் இரா. பிரபு, சேவா சங்கம் பள்ளி வாக்குச்சாவடியிலும் வாக்களித்தனா். இதேபோல, இதர வேட்பாளா்களும் அவரவருக்கான வாக்குச் சாவடிகளில் வாக்களித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com