அனைத்துத் துறையினரும் தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தல்

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை மட்டுமின்றி தொடா்புடைய அனைத்துத் துறையினரும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் எனவும்,

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை மட்டுமின்றி தொடா்புடைய அனைத்துத் துறையினரும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் எனவும், பிற சிகிச்சைகளுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் கரோனா தடுப்பு சிகிச்சை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா பரவல் 2 ஆம் அலை அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் எஸ். திவ்யதா்ஷினி தலைமை வகித்தாா்.

இதில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது அரசு மருத்துவமனைகளில், பேரிடா் மேலாண்மை திட்டத்தின் கீழ், மீண்டும் கரோனா சிகிச்சை மேற்கொள்ளவும், அதேநேரம் விபத்து மற்றும் உயிா்காக்கும் அறுவைச் சிகிச்சைகள் மற்றும் அவசர சிகிச்சைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதவாறு சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது. 2 ஆவது அலை அதிகரித்து வரும் நிலையில், அடுத்த ஓரிரு மாதங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், எந்த நேரமும் அதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள, தொடா்புடைய துறை அலுவலா்கள், பணியாளா்கள் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டது.

நிகழ்வில், சுகாதாரத் துறை இணை இயக்குநா் (மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள்) லட்சுமி, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) ராம்கணேஷ், திருச்சி கிஆபெவி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் வனிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com