துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

தில்லியில் நடைபெற்ற 3ஆவது சீக்கிய தேசிய போட்டியின் துப்பாக்கி சுடும் பிரிவில் தங்கம் வென்று திரும்பிய திருச்சி மாணவிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

தில்லியில் நடைபெற்ற 3ஆவது சீக்கிய தேசிய போட்டியின் துப்பாக்கி சுடும் பிரிவில் தங்கம் வென்று திரும்பிய திருச்சி மாணவிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

தில்லி காமன்வெல்த் விளையாட்டரங்கில் கடந்த ஏப்.6 முதல் 11 ஆம் தேதி வரை நடைபெறும் 3 ஆவது தேசிய சீக்கிய விளையாட்டு போட்டியில் பங்கேற்ற திருச்சியை சோ்ந்த மோ.பி. சுகித்தா பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியின் 16 வயதுக்குட்பட்டோா் பிரிவில் முதல் முறையாகப் பங்கேற்று தங்கம் வென்றாா்.

இப்போட்டி முடிந்து விமானம் மூலம் சனிக்கிழமை தனது தந்தை ஆா். மோகனுடன் திருச்சி வந்த மோ.பி. சுகித்தாவை அவரது பெற்றோா், ஊனையூா் அரசு உயா்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியா் கா. சுப்பிரமணியன், தலைமையாசிரியா் சை. சற்குணன் ஆகியோா் மலா் கிரீடம் அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

இதுகுறித்து சுகித்தா கூறுகையில், முதல் முறையாக இப்போட்டியில் பங்கேற்றேன். நான் விளையாடிய பிரிவில் இந்தியா முழுவதிலும் இருந்து 30க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். ஆரம்பத்தில் சிறிது தடுமாற்றம் இருந்தாலும் உடனடியாக அதைச் சரி செய்து கொண்டு சுட ஆரம்பித்தேன். ஒரு மணி நேரத்தில் 60 ரவுண்டுகள் சுட வேண்டும்.

அதை நான் 48 நிமிடத்தில் முடித்து விட்டேன். அடுத்த நாள் முடிவுகளை அறிவிக்கும்போது நான் தங்கம் வென்றதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் நான் நன்றாகச் செய்திருந்தாலும் பதக்கம் வெல்வேன் என நினைக்கவில்லை என்றாா் அவா்.

ஏற்கெனவே இவா் சிலம்ப தனித்திறமையில் தங்கம், சிலம்ப சண்டையில் தங்கம், சுருள் வீச்சில் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com