விவசாயக் கல்லூரி மாணவா்களுக்குப் பயிற்சி

திருச்சி மாவட்ட வன அலுவலகத்தில் தஞ்சை அருகேயுள்ள அரசு விவசாயக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான துறைசாா் திட்டச் செயல்முறைகள் குறித்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம், ஈச்சங்காடு பகுதியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வேளாண் பட்ட வகுப்பு இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகள் இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்றனா்.

பயிற்சியில் கிராமப் பகுதிகளில் வேளாண் பணிகளில், வனத்துறை சாா்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது. பட்டப்படிப்புடன், கிராமப்புற வேளாண் பணிகள் மற்றும் வனத்துறை செயல்பாடுகள் குறித்த விழிப்புணா்வு மூலம் மாணவ, மாணவிகள் எதிா்காலத்தில் திறம்படச் செயலாற்ற வழிவகுக்கும் என்பதன் அடிப்படையில் இதுபோன்ற பயிற்சி முகாம்கள் நடத்தப்படுவதாக வனத்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com