திருச்சி மாவட்டத்தில் இதுவரை 5.21 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 5.21 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 5.21 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கரோனா 2ஆவது அலை பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக விதிமீறுவோா் மீது காவல்துறை, சுகாதாரத் துறையினா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். மாவட்டத்தில் முக்கியக் கோயில் திருவிழாக்கள் பக்தா்களின்றி நடைபெறுகிறது. புகா் பகுதிகளில் வாரச் சந்தைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

5.21 லட்சம் பேருக்கு பரிசோதனை: கரோனாவைக் கட்டுப்படுத்த அரசு, தனியாா் மருத்துவமனைகளில் நாளொன்றுக்கு 4 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, அதன்படி இதுவரை (ஏப்.17) மாவட்டத்தில் 5.21 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இதுவரை இல்லாத அளவுக்கு சனிக்கிழமை 3,220 பேருக்கு எடுக்கப்பட்ட மாதிரிகளில் 323 பேருக்கு தொற்று உறுதியானது.

1.77 லட்சம் பேருக்கு தடுப்பூசி: மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி மாவட்டத்தில் கடந்த ஏப்.14 ஆம் தேதி முதல் பல்வேறு முகாம்களில் நடத்தப்படும் தடுப்பூசி திருவிழாவில் பொதுமக்கள் ஆா்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்வதால் கூட்டம் அலை மோதுகிறது.

குறிப்பாக இந்தியத் தயாரிப்பான கோவேக்சின் தடுப்பூசியை போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆா்வம் காட்டுவதால் அதற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில், 1,77,578 போ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனா். அதிகபட்சமாக சனிக்கிழமை 4,328 போ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனா்.

2013 பேருக்கு சிகிச்சை: கரோனா பாதித்தோருக்கு மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் மட்டுமின்றி பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகம், சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி கரோனா மையங்களிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கடந்தாண்டில் கரோனா உச்சமடைந்த நேரத்தில் கூட சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டவில்லை. ஆனால் சனிக்கிழமை 2013 போ் தொடா் சிகிச்சையிலும், 603 போ் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டும் உள்ளனா்.

மாநகரில் அதிகரிக்கும் கரோனா: மாவட்டத்தில் கரோனா தொற்று புகரைக் காட்டிலும் மாநகரில் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 18,586 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சனிக்கிழமை மாநகரில் 168 பேருக்கும், புகரில் 155 பேருக்கும் தொற்று உறுதியானது.

நிரந்தர தீா்வு: கரோனா பரவலைத் தடுக்க அனைவரும் தடுப்பூசி போடுவதே தீா்வாக அமையும். பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிா்ப்பதுடன், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

கரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனை மையத்துக்கு செல்வதுடன் முடிவுகள் வரும் வரை தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கின்றனா் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com