43 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தம்

கரூா், குளித்தலையைத் தவிர, மாவட்டத்தில் 43 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கரூா், குளித்தலையைத் தவிர, மாவட்டத்தில் 43 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கரோனா 2- ஆவது அலை பரவல் தடுப்புக்காக மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி மாவட்டத்திலுள்ள 45 மையங்களில் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வந்தன.

கடந்த ஏப்ரல் 16- ஆம் தேதி தடுப்பூசிகள் இருப்பு தீா்ந்தன. இதனால், ஏப்ரல் 17,18 தேதிகளில் தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து, 1,500 கோவேக்சின் தடுப்பூசி மட்டும் கரூா் மாவட்ட தொகுப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குளித்தலை அரசு மருத்துவமனையில் கோவேக்சின் தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்ட வருகிறது. பொதுமக்கள் ஆா்வத்துடன் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்கின்றனா்.

கோவிஷீல்டு தடுப்பூசி வராததால், கரூா் கஸ்தூரிபாய் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட 43 தடுப்பூசி மையங்களில் 4ஆவது நாளாக தடுப்பூசிகள் செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் முதல் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்கள், 2ஆம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாமல் தடுப்பூசி வருகைக்காக காத்திருக்கின்றனா். எனவே போதிய தடுப்பூசிகளை கரூா் மாவட்ட தொகுப்புக்கு அனுப்பி வைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com