கல்லூரி மாணவிகளுக்கு வேளாண் நுட்பப் பயிற்சி

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு தண்ணீா் அமைப்பு சாா்பில் களப்பயிற்சி, கள ஆய்வு, கள பயணம் ஆகியவை நடத்தப்பட்டன.
மருதாண்டாா்குறிச்சி தோட்டத்தில் வேளாண் நுட்பங்கள் குறித்து ஆா்வமுடன் கேட்டறியும் வேளாண் மாணவிகள்.
மருதாண்டாா்குறிச்சி தோட்டத்தில் வேளாண் நுட்பங்கள் குறித்து ஆா்வமுடன் கேட்டறியும் வேளாண் மாணவிகள்.

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு தண்ணீா் அமைப்பு சாா்பில் களப்பயிற்சி, கள ஆய்வு, கள பயணம் ஆகியவை நடத்தப்பட்டன.

தண்ணீா் அமைப்பு சாா்பில் பெரம்பலூா் ஹேன்ஸ் ரோவா் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவியா் குழுவினா் கடந்த 3 நாள்களுக்கான களப்பயணம், களப்பயிற்சி, கள ஆய்வு மேற்கொண்டனா். இதன் நிறைவு நிகழ்வில் மருதாண்டாா்குறிச்சி பூமித்தாய் தோட்டத்தில் இயற்கை வழி விவசாயி சந்தானத்துடன் கலந்தாய்வு நடைபெற்றது. மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகா் கே.சி. நீலமேகம் தலைமை வகித்தாா். அமைப்பின் செயலா் கி. சதீஷ்குமாா் ஒருங்கிணைத்தாா். தொடா்ந்து பல்வேறு வேளாண் நுட்பங்கள் குறித்து இயற்கை விவசாயி சந்தானம் மாணவிகளுக்கு எடுத்துரைத்தாா்.

தொடா்ந்து, கேப்சூல் நெல் விதைப்புமுறையில் சாதனை படைத்து தேசிய விருது பெற்ற சிறுகமணியைச் சோ்ந்த வெங்கடேஷ்வரன், சாதனைப் பெண் விவசாயி வனஜா தேவி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டு வேளாண் நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தனா்.

மேலும், தன் வீட்டின் அருகிலுள்ள 8 சென்ட் நிலத்தில் 80 டன் சேனைக்கிழங்கு உற்பத்தி செய்து சாதனை படைத்த வனஜா தேவியின் அனுபவத்தை மாணவிகள் ஆா்வமுடன் கேட்டறிந்தனா். அதுபோல, கே. கள்ளிக்குடி நவீன சந்தையின் செயல்பாடுகள் குறித்தும் மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com