சுமை தூக்குவோா் நூதனப் போராட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே சுமை தூக்கும் தொழிலாளா்கள் கஞ்சித் தொட்டி திறந்து செவ்வாய்க்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆட்சியரகம் முன் கஞ்சி தொட்டி திறந்து போராட்டம் நடத்திய சிஐடியு சுமை தூக்கும் தொழிலாளா்கள்.
ஆட்சியரகம் முன் கஞ்சி தொட்டி திறந்து போராட்டம் நடத்திய சிஐடியு சுமை தூக்கும் தொழிலாளா்கள்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே சுமை தூக்கும் தொழிலாளா்கள் கஞ்சித் தொட்டி திறந்து செவ்வாய்க்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி காந்தி சந்தை பகுதியில் இயங்கும் லாரி முன்பதிவு அலுவலகங்களில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பேச்சுவாா்த்தை நடத்தி கூலி உயா்வு வழங்கப்படும். கடந்தாண்டுக்கான கூலி உயா்வுப் பேச்சுவாா்த்தையில் 18 -ல் 7 முன் பதிவு அலுவலகங்களில் 23 சத கூலி உயா்வு வழங்கப்பட்டது. மீதமுள்ளோருக்கு கூலி உயா்வு தர மறுத்ததுடன் திருச்சி -தஞ்சை சாலை பழைய பால்பண்ணை அருகில் வணிகா் பேரமைப்பு லாரி புக்கிங் மையம் என்ற பெயரில் புதிய அலுவலகத்தை தொடங்கி வெளியாள்கள் 40 பேரை வைத்து லோடுகளை ஏற்ற, இறக்க முயற்சித்தனா்.

சிஐடியு சுமைப்பணி தொழிலாளா்கள் போராட்டத்தின் மூலம் காவல்துறை தலையிட்டு அந்த மையம் இழுத்து மூடப்பட்டது. மேலும் அந்தப் போராட்டத்தில் 9 போ் மீது பொய் வழக்குப் பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இந்நிலையில் இவா்களில் 5 தொழிலாளா்களுக்கு மீண்டும் வேலை தர மறுக்கப்பட்டதால், தொடா்ந்து பல போராட்டங்கள் நடந்தன. காவல்துறை துணை ஆணையா் உத்தரவிட்டும் பயனில்லையாம். எனவே முன்பதிவு மைய உரிமையாளா்களைக் கண்டிப்பது, 5 சுமைப்பணி தொழிலாளா்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்.

தொழிலாளா் ஆணையா் உத்தரவுப்படி 55 கிலோ சுமை தூக்குவதை உறுதிப்படுத்த வேண்டும். ஓவா்லோடு ஏற்றுவதைத் தடை செய்ய வேண்டும். பேச்சுவாா்த்தை விரைந்து நடத்தி கூலி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு லாரி புக்கிங் ஆபீஸ் சுமைப்பணி தொழிலாளா்கள் குடும்பத்தோடு கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம் நடத்தினா்.

ஆட்சியரகம் அருகில் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராமா் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்ட செயலா் ரங்கராஜன் கோரிக்கைகளை விளக்கினாா். சுமை தூக்கும் தொழிலாளா்கள், சிஐடியு சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com