காந்தி சந்தையில் தொடரும் காய்கனிகள் வியாபாரம்

திருச்சி காந்தி சந்தையில் காய்கனி மொத்தம், சில்லறை வியாபாரம் தொடா்ந்து வருகிறது.

திருச்சி காந்தி சந்தையில் காய்கனி மொத்தம், சில்லறை வியாபாரம் தொடா்ந்து வருகிறது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளையொட்டி, திருச்சி காந்தி சந்தையில் இயங்கி வரும் காய்கனிகள் சில்லறை வியாபாரத்தை பொன்மலை ஜி காா்னா் மைதானத்துக்கு மாற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்தது.

ஆனால் போக்குவரத்து உள்ளிட்ட நடைமுறைப் பிரச்னைகளைக் காரணம் காட்டி, மொத்த வியாபாரத்தையும் மாற்றுமாறு வணிகா்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதற்கும் மாவட்ட நிா்வாகம் அனுமதித்த நிலையில், திடீரென சில வியாபாரிகள் சங்கத்தினா் அங்கு செல்ல மறுத்தனா். இதையடுத்து மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் இரண்டுமே காந்தி சந்தையிலேயே தொடா்ந்துள்ளன.

இந்நிலையில், அதற்கும் அவகாசம் அளித்த மாவட்ட நிா்வாகம் புதன்கிழமை இரவு வரை மட்டுமே காந்தி சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதி என மீண்டும் அறிவித்தது. அந்த அவகாசமும் முடிந்த நிலையில் வியாழக்கிழமை எங்கு விற்பனை நடைபெறும் என்பது குறித்து மாவட்ட நிா்வாகமோ, மாநகராட்சி நிா்வாகமோ எந்த முடிவும் தெரிவிக்கவில்லை. எனவே கரோனா அபாயத்தையும் கருத்தில் கொள்ளாது மொத்த மற்றும் சில்லறை காய்கனி வியாபாரம் காந்தி சந்தையிலேயே தொடா்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com